Monday, December 08, 2008

481. தமிழக அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசு கேட்காது: சிறிலங்கா இராணுவத் தளபதி

பொன்சேகா இப்படிப் திமிராகப் பேசுவதற்கு என்ன காரணம் ? தமிழகத் தலைவர்களின் கையாலாகத்தனத்தைப் பற்றி அவர் தெளிவாக அறிந்திருப்பது தான். இந்த விசயத்தில் மத்திய அரசிடம் திராவிடக் கட்சிகள் உறுதியாகப் பேசி எதுவும் உருப்படியாக செய்ய மாட்டார்கள் என்பதையும், அக்கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் பங்கு ஒன்றே முக்கியம் என்பதையும் பொன்சேகா கூட தெரிந்து வைத்திருப்பது தான் கொடுமை.
எ.அ.பாலா
*********************************************
[திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2008, 05:10 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
இந்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை கேட்கமாட்டாது என்றும் விடுதலைப் புலிகளுடன் கொழும்பு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா அரச சார்பு ஊடகமான டெய்லி நியூஸ் நாளேட்டின் வாரப் பதிப்பான சண்டே ஒப்சேர்வருக்கு சரத் பொன்சேகா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என நான் உறுதியாக நம்புகின்றேன்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தொடர்புள்ளதன் காரணத்தினால் அவருக்கு சாவொறுப்பு தண்டனை வழங்குவதற்காக கையளிக்கப்படவேண்டும் என்றும் இந்தியா கேட்டுள்ளது.

பம்பாய் குண்டுவெடிப்பு நிகழ்விற்கு பிற்பாடு மன்மோகன்சிங்கின் அரசிற்கு அதிகமான பிரச்சினைகள் உள்ளதோடு இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்தியா ஏற்கனவே தனது நிலைப்பாட்டினை தெரிவித்தும் உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா ஏற்கனவே எடுத்துள்ளதுடன் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிலைப்பாட்டினை எடுக்கப்போவதில்லை.

இந்தியா தமிழ் மக்களின் உணர்வலைகள் தொடர்பாக மறுபக்கம் தலையை திருப்பமுடியாது என்பதுடன் படை நடவடிக்கைகளில் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதிலும் அக்கறையாக உள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்தியா உணவு மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றது.

இந்தியாவின் இந்த 'அப்பாவி தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது' என்ற கரிசனைக்கு சிறிலங்காவானது தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குகின்றது. இந்தியாவும் எம்மிடம் இதனையே எதிர்பார்க்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலும் மோசமான வானிலையிலும் சிறிலங்கா படையினர் கொழும்பில் இருந்து 350 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் மையமாக முன்னர் விளங்கிய கிளிநொச்சி நகரின் பலமுனைகளில் மிகவும் அண்மையாக சமர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னேறும் எமது படையினர் நிச்சயமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவார்கள். இதன்பின் விடுதலைப் புலிகள் ஒன்றில் கடலுக்குள் குதிக்கவேண்டும் அல்லது சயனைட் வில்லைகளை உட்கொள்ளவேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபடும்போது பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக கருத்தில் எடுப்பதில்லை என சரத் பொன்சேகாவிடம் சண்டே ஒப்சேர்வர் கேள்வி எழுப்பிய போது, இந்தக் குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகளினால் லஞ்சம் வழங்கப்பட்ட, ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினால் மட்டுமே கூறப்படுகின்றது।

படை நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் கொல்லப்படுவதில்லை என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இவர்கள் சில அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஏனெனில் இவர்களின் பிழைப்பானது விடுதலைப் புலிகளிடமே தங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்படுவார்களானால் அரசியல் கோமாளிகளான நெடுமாறன், வைகோ மற்றும் இவர்களைப் போன்ற விடுதலைப் புலிகளை ஆதரவளிப்பவர்கள் தமது வருமானத்தினை இழப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது தமிழ்நாட்டிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதுடன் அவர்களது தனிநாடு என்ற கோட்பாடானது இந்தியாவின் இறைமைக்கு மிகவும் அச்சுறுத்தலாகும். பொதுவாக நோக்குமிடத்து விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோட்பாடானது இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலாகும்.

ஏனெனில் இந்தக் கோட்பாடானது தமிழ்நாட்டிற்கும் பரவக்கூடும். தற்போது தமிழ்நாடானது இந்திய அரசிற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதில் இருந்தும் விடுதலைப் புலிகளின் சார்பாக நிலைப்பாட்டினை எடுப்பதில் இருந்தும் இது நீரூபணமாகின்றது
என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

நன்றி: புதினம்.காம்

11 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

said...

ஏனெனில் இந்தக் கோட்பாடானது தமிழ்நாட்டிற்கும் பரவக்கூடும். தற்போது தமிழ்நாடானது இந்திய அரசிற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதில் இருந்தும் விடுதலைப் புலிகளின் சார்பாக நிலைப்பாட்டினை எடுப்பதில் இருந்தும் இது நீரூபணமாகின்றது//

பின்னூட்டம் வெண்டாம்.

இது ஏற்புடையதல்ல, இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை, இலங்கையில் அனைவருக்கும் சம உரிமை பெற்றுத்த உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்/ பெற்றுத்தரவேண்டும். தமிழ்நாடு தனியாக யாரும் கேட்பார்கள் என்பது வெறும் வெறுப்பை ஒரு சாணக்கியத்தனமே.

இலங்கையில் தனி ஈழம் என்பதுவும் சாத்தியமல்ல என்றே தோண்றுகிறது.ஆனால் சம உரிமை சாத்தியமே.பொன்சேகா அதை விரும்புகிறாரா?

இந்த பதிவின் மூலம் அவர் வளர்க்கும் வெறுப்புக்கு நீங்கள் துணை போகிறீர்கள் உங்களை அறியாமல்.

இந்து ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

ரவி said...

///பின்னூட்டம் வெண்டாம்.///

ஐ திங்க் இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்ங்குறாரு அப்படீன்னு நினைக்கிறேன்...

ஒற்றுமையை ஏற்படுத்துற வழியை பின்னால் பார்த்துக்கொண்டு, முதலில் இந்த பின்னூட்டத்தை டெலீட் செய்யும் வழியை பார்க்கவும் ஹி ஹி ஹி

Unknown said...

//பொன்சேகா இப்படிப் திமிராகப் பேசுவதற்கு என்ன காரணம் ? தமிழகத் தலைவர்களின் கையாலாகத்தனத்தைப் பற்றி அவர் தெளிவாக அறிந்திருப்பது தான்.//
இப்படி சாதாரணமாக போய்விடலாம். ஆனால் தலையில்லா கோழிகள் என்று யாரோ ஒரு அமெரிக்க அதிகாரி சொன்னபோது அப்படித்தான் போனோமா?

தமிழ் சசி | Tamil SASI said...

பொன்சேகா மிகச் சரியாக சொல்லியிருக்கிறார். இந்த விடயத்தில் நான் பொன்சேகாவை ஆதரிக்கிறேன். கலைஞரும் மற்ற காங்கிரஸ் ஆதரவு தமிழக தலைவர்களும் அடித்த கூத்துகள் திரைப்பட காமெடிகளை விட சிரிப்பை வரவழைத்தது. வேதனையாகவும் இருந்தது. இவர் இங்கிருந்து டெல்லி போவதும், உடனே பிரணாப் கொழும்பு போவதும், பிறகு திரும்பி வந்து ஏதோ சொல்வதும், தனக்கு முழு திருப்தி ஏற்பட்டு விட்டது என்பது போல கருணாநிதி கூறுவதும் சகிக்க முடியவில்லை.

தற்பொழுது பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சரியாகவே கூறியிருக்கிறார்.

தமிழக தலைவர்கள் முதலில் அறிக்கை விடுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு தங்களுடைய எம்.பி. பதவிகளை உதறி தள்ள வேண்டும். மைய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும். அதைச் செய்யாமல் இருந்தால் பொன்சேகா கூறுவது போல இவர்கள் எல்லாம் ஜோக்கர்கள் தான்.

பொன்சேகாவின் கருத்து மிகச் சரியானது.

enRenRum-anbudan.BALA said...

அனானி,
பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என்று கூறியதை கவனிக்கவில்லை. அதனால் தான் வெளியிட்டு விட்டேன். மன்னிக்கவும் !

அனானியாகத் தானே சொல்லியுள்ளீர்கள். மேலும், உங்கள் கருத்தை அனைவரும் வாசிப்பதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு ஒரு குட்டு வைத்துள்ளீர்கள், பரவாயில்லை :) அப்படியும் நீங்கள் எடுத்து விடச் சொன்னால், நீக்கி விடுகிறேன். சொல்லுங்கள் !

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

செந்தழல் ரவி,
கரெக்டா "கிளப்பி விட" வந்துட்டீங்களா??? :) 'இந்து' ஒற்றுமையை விட இந்திய ஒற்றுமை முக்கியம் என்பது என் கருத்து!

enRenRum-anbudan.BALA said...

உமையணன்,
//இப்படி சாதாரணமாக போய்விடலாம். ஆனால் தலையில்லா கோழிகள் என்று யாரோ ஒரு அமெரிக்க
அதிகாரி சொன்னபோது அப்படித்தான் போனோமா?
//
அப்படிச் சொன்னது அமெரிக்கர் யாரும் இல்ல, அமெரிக்காவில் உள்ள நமது இந்தியத் தூதர் சென்!

enRenRum-anbudan.BALA said...

சசி,
//தமிழக தலைவர்கள் முதலில் அறிக்கை விடுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு தங்களுடைய எம்.பி.
பதவிகளை உதறி தள்ள வேண்டும்.
//
உண்மையான அக்கறை உள்ளவர்கள் அதைத் தான் செய்வார்கள், கூவ மாட்டார்கள். அதுவும் தேர்தலுக்கு 5-6 மாதங்களே இருக்கும்போது அது ஒரு பெரிய தியாகம் கூட கிடையாது. மத்திய அரசுக்கு ஒரு ஷாக் கொடுத்த மாதிரி இருக்கும்! புலிகள் மேல் பெரிய மதிப்பு இல்லாவிட்டாலும் கூட, இந்த தருணத்தில், அப்பாவி ஈழத் தமிழர்களின் உயிர்/உடைமை இழப்பைத் தவிர்க்க போரை நிறுத்தியே ஆக வேண்டும், அதற்கு மத்திய அரசு 'சைலண்டாக' பிரஷர் கொடுக்கச் செய்ய வேண்டும்!!!

ஆனால், ஒரு நாட்டின் ராணுவத் தலைவர் ஒருவர் இப்படி பிறநாட்டு அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது protocol/etiquette படி தவறு என்பது பத்ரியின் வாதம்.

ரவி said...

//செந்தழல் ரவி,
கரெக்டா "கிளப்பி விட" வந்துட்டீங்களா??? :) 'இந்து' ஒற்றுமையை விட இந்திய ஒற்றுமை முக்கியம் என்பது என் கருத்து!///

அய்யோ நல்லதுக்கு காலமில்லையா ?

பாருங்க, சப்போஸ் அந்த பின்னூட்டத்தை நீக்கினா மறுபடி அந்த வேர்ட்ஸ் வரக்கூடாதுன்னு ஒரு வார்த்தையை வெட்டினேனே ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

enRenRum-anbudan.BALA said...

ரவி,
//அய்யோ நல்லதுக்கு காலமில்லையா ?

பாருங்க, சப்போஸ் அந்த பின்னூட்டத்தை நீக்கினா மறுபடி அந்த வேர்ட்ஸ் வரக்கூடாதுன்னு ஒரு வார்த்தையை வெட்டினேனே ?
//
சும்மா தமாஷ் தான், Nothing serious :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails